மன்னாரிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த தேசப்பிரிய

Report Print Ashik in தேர்தல்

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ளார்.

இதன்போது, மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனினற்றனுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் மற்றும் உரிய அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான வாக்கு வீத அதிகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற வீதி நாடகத்தில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கலந்து கொண்டிருந்தார்.

மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் காலை 10.15 மணியளவில் குறித்த வீதி நாடகம் இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக குறித்த வீதி நாடகம் இடம்பெற்றது.

இதன்போது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட குழுவினர் குறித்த விழிர்ப்புனர்வு வீதி நாடகத்தை பார்வையிட்டனர்.