சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மட்டக்களப்பில் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பு!

Report Print Kumar in தேர்தல்

2020ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இன்று காலை ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் வாக்களிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றது.

இன்றைய தினம் சுகாதார துறை சார்ந்த ஊழியர்களின் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி வாக்களிப்புகள் நடைபெற்றதுடன் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தில் இன்றைய தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளில் சுகாதார துறை ஊழியர்கள் பங்குகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 12,815 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கான தகுதி பெற்றுள்ளதுடன் 212 நிலையங்களில் தபால்மூல வாக்களிப்புகள் நடைபெறவுள்ளன.