யாழ்ப்பாண மக்களுக்கு ஒகஸ்ட் ஐந்திற்கு பின்னர் காத்திருக்கும் ஆபத்து! விரைந்து முடிவெடுங்கள்

Report Print Dias Dias in தேர்தல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒருவேளை சுமந்திரன் வெற்றிபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபடக்கூடிய ஆபத்து உள்ளதென பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குனரும் , மனித உரிமைகள் செய்ற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய தேர்தல் நிலைமைகளை அவதானித்தால் தமிழ்த் தேசியத்தின் நிலை அது மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது.

தமிழ்த் தேசியம் பேசுபவர்கள், தமிழ் வரலாற்றை கூறுபவர்கள்,தமது கட்சிகளை பற்றி பெருமையாக பேசுபவர்கள் பல விடயங்களை அவதானத்தில் கொள்ளவில்லை.

இத் தேர்தலில் மாற்று அணி எனப் பேசுபவர்கள் அத்தனையும் மறந்த அணியாக இருக்கின்றனர்.எமது வரலாறு, எமக்கு இழைக்கபட்ட அநீதியை கூட மறந்துள்ளனர்.

1960 ஆம் ஆண்டில் கொல்வின் ஆர்.டி சில்வா கூறிய இருதேசம் ஒரு நாடு என்னும் கருத்தை தாம்தான் முதல்முதலில் கண்டுபிடித்தது போல் கூறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கூட்டமைப்பை உடைத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்குவதற்க்கு அனுமதியளித்தது யார் என்று தெரியவில்லை.

அவரும் அவரது குழுவினரும் சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றனர் என்பது உறுதியாகத் தெரிகிறது.

சுமந்திரனை திறமையான சட்டத்தரணி, எல்லா விடயங்களையும் சிறப்பாக செய்பவர் எனக் கூறுகின்றனர். ஆனால் அவர் உள்ளிட்டவர்கள் புதிய அரசியல் யாப்பிற்கு நாம் உதவி செய்யவேண்டுமென கூறி தமிழ் மக்களை தெருவில் விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் 11 மாணவர்கள் மாணவர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரியும், பிணை வழங்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சுமந்திரனின் கனிஸ்ட சட்டத்தரணியான நிரன் அங்கடெல் ஆஜராகியிருக்கின்றார்.