தேர்தல் விதிமுறைகளை மீறிய 3040 சம்பவங்கள் இதுவரை பதிவு! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

Report Print Ajith Ajith in தேர்தல்

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறிய 3040 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நேற்று வரையான பகுதியில் 114 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 730 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மாவட்ட முறைப்பாட்டு முகாமை நிலையங்களுக்கு 2310 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்று கொள்ளும் இந்த முகாமை நிலையம் தேர்தல்கள் செயலகத்தின் இரண்டாம் மாடியில் செயற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முறைப்பாடுகளை 0112886179, 011 2886421, 011 2886117 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என்று பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.