வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது

Report Print Thileepan Thileepan in தேர்தல்

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று வாகனங்களும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று அதிகாலையில் இருந்து மாலை வரை வவுனியா பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தேர்தல் விதிமுறையை மீறி சுவரொட்டிகள் காட்சிப்படுத்தியமை, தபால் மூல வாக்களிப்பு பகுதியில் பிரச்சாரம் முன்னெடுத்தமை, தேர்தல் விதிமுறைக்கு மாறாக வாகனங்களில் தேர்தல் சுவரொட்டிகள் கொண்டு சென்றமை, வாகனங்களில் வேட்பாளர்களின் படங்களை காட்சிப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.