தேர்தல் கணிப்பீடு...! திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in தேர்தல்

அம்பாறை மாவட்டம்! மொத்த ஆசனம் –6, 1போனஸ் ஆசனம் –6+1= 7 என தேர்தல் கணிப்பீட்டைச் செய்து ஒரு எதிர்வுகூறலை சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த மொட்டுக் கட்சியும், சஜித் பிரேமதாசவின் தொலைபேசி சின்னம் கொண்ட “ ஐக்கிய மக்கள் சக்தி” (இந்த அணியில் தான் ஹக்கீம் தலைமை கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றனர்.

ஆகிய இரண்டு கட்சிகளே பிரதான போட்டியாக உள்ளது. மற்றும்“தமிழ் தேசியக் கூட்டமைப்பு” வீட்டுச் சின்னத்திலும் “ஐக்கிய தேசியக் கட்சி” UNP யானைச் சின்னத்திலும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் “ தேசிய காங்கிரஸ் கட்சி”குதிரை சின்னத்திலும், முன்னாள் அமைச்சர் ரிசாட்டின் “அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்” ACMC மயில் சின்னம் போட்டியிடுகின்றனர்.

ஜே.வி.பி. மணிச் சின்னம் ஆகிய இந்த கட்சிகளே பிரதான போட்டிக்கு அடுத்த படியாக இரண்டாம் போட்டியாக துணைப் போட்டியாக அல்லது இரண்டாம் சுற்றுப் போட்டியாக பலமான போட்டியாக அமைகின்றது.

வெற்றி வாய்ப்புக்கள் எந்தக் கட்சிகள்

 • மொட்டுக் கட்சி -3 ஆசனங்கள்
 • ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி)-2 ஆசனங்கள்
 • தமிழ் தேசியக் கூட்டமைப்புTNA-1
 • அதாவுல்லாஹ்வின் குதிரைக் கட்சி -1

 • அளிக்கப்படக் கூடிய /எதிர் பார்க்கப்படும் மொத்த வாக்குகள் -3.60000
 • மொட்டுக் கட்சி - 1,15000 -117,000 (3 ஆசனங்கள்)
 • ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி)- 92,000-93.000 (2 ஆசனங்கள்)
 • தமிழ் தேசியக் கூட்டமைப்பு- 42,000 -43,000 ( TNA-1 ஆசனம் )
 • அதாவுல்லாஹ்வின் குதிரைக் கட்சி - 40,000-42000 (1 ஆசனம் )
 • அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்” ACMC- 30,000 -32,000(ஆசனம் இல்லை)
 • ஐக்கிய தேசியக் கட்சி UNP - 25,000 -27,000 (ஆசனம் இல்லை)
 • கருணா அணி – 7000-8000 (ஆசனம் இல்லை)
 • ஜேவிபி- ஆசனம்-5000-6000 இல்லை
 • ஏனையவை -4000-

360000 / 6 = ஒரு ஆசனத்திக்கும் ஆகக்குறைந்தது 60 ஆயிரம் வாக்குகள் வேண்டும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பகுதிகளில் தேசிய காங்கிரஸ் கட்சி பரவலாக வாக்குகள் பெரும் நிலையுள்ளது. தற்போதய நிலையில் தேசிய காங்கிரஸ் கட்சி இந்த ஒரு ஆசனத்தை பெறக்கூடிய நிலை உள்ளது.

சஜித் அணிக்கு வாக்குகள் வீழ்ச்சி கண்டு சற்று வாக்குகள் குறைந்து சஜித் அணி 92,000-93.000 க்கு குறையுமானால் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெரும்.

அதாவது சஜித் அணிக்கு வாக்குகள் குறைகின்ற போது மயில் சின்னம் குறைந்த வாக்குகளால் சுமார் 500-1000 வாக்குகளால் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனம் பெறும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் அதிகரிக்குமானால் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தோல்வி பெறும்.

அதாவது ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 7 ஆயிரம் வாக்குளை தன்பக்கம் அதிகரிக்க செய்யுமானால் சஜித் அணிக்கு நாம் கொடுத்துள்ள 2 ஆசனத்தில் 1 ஆசனத்தை பெற்றுக்கொள்ளும்.

பலமான போட்டி ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி) அணிக்கு கிடைக்கவிருக்கும் 2ஆவது ஆசனத்தை ஐக்கிய தேசியக் கட்சி அல்லது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தட்டிப்பறிக்கக் கூடிய ஒரு நிலையுள்ளது.

அதாவது சஜித் அணியின் 2 அவது ஆசனத்தை ஐதேக அல்லது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய ஒரு அபாயகரமான நிலையுள்ளது.

இவைகளில் இருந்து காப்பற்றப்பட வேண்டுமனால் வாக்குச் சிதறல் இல்லாமல் 80 வீதம் தாண்டி வாக்களிப்பு இடம்பெற வேண்டும். ஆனால் இம்முறை வாக்களிப்பு வீதம் குறையும். இம்முறை வாக்களிப்பு வீதம் என்பது 60-65 வீதமாகவே இருக்கும்.

சஜித் பிரேமதாசவின் தொலைபேசி சின்னம் கொண்ட “ ஐக்கிய மக்கள் சக்தி” அணியில் தான் ஹக்கீம் தலைமை கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் கல்முனை ஹரீஸ்,நிந்தவூர் பைசல் காசிம் ஆகிய 2 பேர் மட்டுமே வெற்றி பெறும் நிலை. இதில் நிந்தவூர் பைசல் காசிம் வெற்றி பெறும் நிலை தான் உள்ளது.

ஆனாலும் சிங்கள பகுதியில் மனாப்பை சிதறல் இல்லாமல் சிங்கள மக்கள் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு அள்ளிப் போட்டால் அல்லது மொத்தமாக வாக்களித்தால் சிங்கள வேட்பாளர் ஒருவரும் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெறுவார்கள்.

அப்படி அமைந்தால் கல்முனை ஹரீஸ் வெற்றி பெறும் நிலையுள்ளது. இவைகளை தடுக்க வேண்டுமானால் முஸ்லிம் பகுதிகளில் வெட்டுக் குத்துக்கள் குழிபறிப்புக்கள் இல்லாமல் பொத்துவில் இருந்து மருதமுனை வரையுமான முஸ்லிம் மக்களின் மனாப்பை சரியாக அளிக்கப்பட வேண்டும்.

அதே போன்று தமிழ் மக்களின் வாக்குகள் பிரியாமல் பொத்துவில் இருந்து மருதமுனை வரையுமான தமிழ் மக்களின் வாக்குகள் வீட்டுச் சின்னத்திக்கு அளிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் வாக்குகள் சிதறாமல் சிந்தாமல் வழமை போன்று வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறையுமானால் தமிழ் மக்களின் அம்பாறை மாவட்ட ஆசனத்தை ஐக்கிய மக்கள் சக்தி அடைந்து விடும்.

ஆனால் இம்முறை அம்பாறை கச்சேரி கருணாவை வெற்றி பெற வைக்கும் என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனம் இல்லாமல் போகும் நிலை பிரகாசமாக உள்ளது.

அத்துடன் சஜித் அணியின் இரண்டாம் ஆசனம் ஐ.தே.க கச்சேரி வெற்றி பெற வைக்கும் நிலையும் உள்ளது.

அதனால் நேர்மையான தேர்தல் நடைபெற்றாலும் நேர்மையான வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்ற சந்தேகம் வலுத்து வருகின்றது.

இது நேர்மையான வாக்கு எண்ணிக்கை என்றால் மட்டுமே நாம் தந்துள்ள இந்த கணக்கு சரியாக அமையும்.