சுமந்திரன் - சிறிதரன் பேச்சில் தமிழ் மக்கள் மயங்கிவிடக்கூடாது! பிரபல திரைப்பட இயக்குனர் கௌதமன் எச்சரிக்கை

Report Print Gokulan Gokulan in தேர்தல்

தமிழர்களை அழித்தொழிக்க சிங்களத்தோடு கைகோர்த்துக்கொள்ளும் நாடகத்தை கூச்ச நாச்சமில்லாமல் நடாத்தும் சம்பந்தர், சுமந்திரன், சிறிதரன் போன்றோரை இந்த தேர்தலில் தோற்றகடிக்கவேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார் பிரபல திரைப்பட இயக்குனரும், தமிழ் செயற்பாட்டாளருமான வ.கௌதமன்.

தமிழீழ தேசியத் தலைவரை புகழ்ந்து வாக்கு கேட்டு தமிழ் மக்கள் மத்தியில் வருகின்ற இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே அவர்களுக்கு கறைபூசி, காலில்போட்டு மிதிக்கின்ற ஈனச்செயல்களை செய்கிற பெரும் கூட்டம் என்று சுட்டிக்காண்பித்த அவர், இவர்களையிட்டு தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவையென்றால் சிங்களக் கொடியையும் எந்தி தனது சிங்கள பாசத்தைக் காண்பிக்கும் ஒருவர்தான் சம்பந்தன்.

ஐ.நா வரை பறந்து இலங்கையில் நடைபெற்றது போர் குற்றம்தான்- இன அழிப்பு அல்ல என்று வாதாடி சிங்கள அதிகார வர்க்கத்திற்கு ஒரு பெரும் சாதகமாகப் பச்சைத் துரோகத்தைச் செய்தவர் சுமந்திரன்.

‘இந்த இனத்திற்கு நான்தான் இனி பாதுகாவலன்.. என்னை நம்புங்கள்..’ என்று சொன்ன சிறிதரன் இவர்களோடு கைகோர்த்து தனது சுயநலனுக்காக நிற்பது தாங்கமுடியாத துயரம் என்றும் தனது செய்தியில் சுட்டிக்காண்பித்துள்ளார் கௌதமன்.

எப்பொழுதும் துரோகமிழைக்கின்ற டக்ளஸ் தேவாணந்தா, தமிழ்களைக் கடத்திச்சென்று தமிழ் பெண்களைத் தூக்கிச் சென்று கப்பம் கேட்டு வன்புனர்வு செய்த பிள்ளையான் மற்றும் தடம்மாறி இனத்தை காட்டிக்கொடுத்த கருணா போன்றவர்கள் வரிசையில் சம்பந்தர், சுமந்திரன் சிறிதரன் போன்றோரையும் இணைத்து, அழகா, அன்பா இனிப்பா பேசும் இவர்களது பேச்சில் தமிழர்கள் நாம் மயங்கிவிடக்சுடாது என்று தமிழ் மக்களை எச்சரித்துமுள்ளார் இயக்குனர் கௌதமன்.