எமக்கெதிராக யுத்தத்தை முன்னெடுத்தவர்கள் இன்று எம்மிடமே வந்து வாக்கு கேட்கின்றனர்: சாள்ஸ் நிர்மலநாதன்

Report Print Gokulan Gokulan in தேர்தல்

தமிழ் மக்களுக்களுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்தவர்கள் இன்று எம்மிடமே வந்து வாக்கு கேட்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மூங்கிலாறு நேற்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

இறுதி யுத்தத்தில் பல உயிர்கள் பறிக்கப்பட்ட இந்த மண்ணில் தற்போது அந்த யுத்தத்தை கொடூரமாக கொண்டு நடத்தியவர்கள் வந்து வாக்கு கேட்கின்றனர்.

அவர்களின் நோக்கம் ஒன்றுதான் தமிழர்களை ஒற்றுமைப்படவிடாது சிதைப்பதே.எமது மக்கள் இந்த தேர்தல் ஊடாக சிறந்த செய்தியை அவர்களுக்கு வழங்கவேண்டும் நாம் ஒற்றுமையாக தலைவன் காட்டிய அந்த பாதையில் தடம் மாறாது பயணிக்கின்றோம் என்று.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஒரு கட்சி.இன்று பேரினவாத அரசாங்கங்களினால் பல கட்சிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எமது மக்களுக்காக இன்று வரும் தமிழ் அமைச்சர்கள் எவரும் குரல் கொடுக்க மாட்டார்கள் அங்கு குரல் கொடுப்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மட்டுமே என்பதை தமிழர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உங்கள் வாக்குகளை தவறாமல் இட்டு நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்ற செய்தியை சர்வதேசத்துக்கும், சிங்கள தேசத்துக்கும் இந்த தேர்தல் ஊடாக சொல்லுவோம் என்று கூறியுள்ளார்.