திகாமடுல்ல மாவட்டத்தில் 525 வாக்களிப்பு நிலையங்களில் 513979 பேர் வாக்களிக்க தகுதி !

Report Print Mubarak in தேர்தல்

2020 நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 20 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 200 வேட்பாளர்களும் 34 சுயேட்சைக்குழுக்களின் 340 வேட்பாளர்களுமாக 540 பேர் 7 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காகப் போட்டியிடுகின்றனர்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இம்முறை அம்பாறை,சம்மாந்துறை, கல்முனை,பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலும் 513979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை தேர்தல் தொகுதியில் 1 லட்சத்து 77ஆயிரத்து 144 பேரும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 90 ஆயிரத்து 405 பேரும் , கல்முனை தேர்தல் தொகுதியில் 77ஆயிரத்து 637 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 793 பேரும் 2019 ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அஞ்சல் வாக்களிப்புக்கென விண்ணப்பித்த 30481 விண்ணப்பதாரர்களில் 28668 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 1813 பேரினது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் வாக்களிக்கவென 525 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி தொகுதி வாரியாக அம்பாறை தேர்தல் தொகுதியில் 181 வாக்கெடுப்பு நிலையங்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிப்பு நிலையங்களும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

குறித்த வாக்குகள் எண்ணும் பணிகளுக்காக 74 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில், தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 19 நிலையங்களும், ஏனையவற்றுக்காக 55 நிலையங்களும் அமையவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 6068 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 10 பேர் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவிலிருந்து போட்டியிடுவர்.

அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தின் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை,பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலும் 513979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.