தேர்தல் கணிப்பீடு! மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்!

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in தேர்தல்
1834Shares

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போனஸ் ஆசனத்துடன் சேர்த்து மொத்தமாக 5 ஆசனங்கள் கிடைக்குமென என தேர்தல் கணிப்பீட்டைச் செய்து ஒரு எதிர்வுகூறலை சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

அவரின் கணிப்பீட்டின்படி,

மொத்த ஆசனங்கள் : 4 +1 போனஸ் ஆசனம் = 5

மட்டக்களப்பு.பட்டிருப்பு ,கல்குடா ஆகிய 3 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியது மட்டக்களப்பு மாவட்டம்.

1.இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு –TNA)

2.சஜித் பிரேமதாசவின் தொலைபேசி சின்னம் கொண்ட “ ஐக்கிய மக்கள் சக்தி” (இந்த அணியில்தான் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சஜித் அணி ஆகிய இரண்டு அணிகள் இணைந்து போட்டியிடுகின்றனர் ! )

3.பிள்ளையான் அணி.

4. ஹக்கீம் தலைமை கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனியாக

ஆகிய இந்த 4 பிரதான கட்சிகளே இங்கு ஆய்வு செய்ய வேண்டிய விடயமாகும்.

ஆக தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் பிரதான கட்சி! இங்கு போட்டி என்பதே இல்லை ஆனால் தமிழ் கூட்டமைப்பின் வாக்குகளை பிரிக்க பல கட்சிகள் களமிறக்கம்.

இந்த 4 பிரதான கட்சிகளே களம் அமைத்துள்ளது!மொட்டுக் கட்சியுடன் இங்கு மல்லுக்கட்டும் போட்டியாக யாருமே இல்லை ! மட்டக்களப்பு என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாவட்டம்!

வெற்றி வாய்ப்புக்கள் எந்தக் கட்சிகள் !

1). தமிழ் தேசியக் கூட்டமைப்பு - (3 ஆசனங்கள்)

2). ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி) -1 ஆசனம்

3). முஸ்லிம் காங்கிரஸ் கட்சி -1

பதியப்பட்டுள்ள மொத்த வாக்குகள் : 398,301

அளிக்கப்படக் கூடிய /எதிர்பார்க்கப்படும் மொத்த வாக்குகள் 250,000-260,000

260 ,000/ 4 = ஒரு ஆசனத்திக்கு ஆகக்குறைந்தது சுமார் 65 ஆயிரம் வாக்குகள் வேண்டும்!

1). இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 140.000- 141,000 (3 ஆசனம்)

2). ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி) - 28,000- 29,000 (1 ஆசனம்)

3). முஸ்லிம் காங்கிரஸ் - 32.000 -33000 ( 1 ஆசனம்)

4) பிள்ளையான் அணி - 26,000 - 27,000 (ஆசனம் இல்லை)

4). ஹிஸ்புல்லாஹ் - 20,000-21,000 (ஆசனம் இல்லை)

(5).ஏனைய கட்சிகளான மீன் கட்சி, பைசிக்கிள் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக -14,000- 15,000

A.இலங்கை தமிழரசுக் கட்சி – ( TNA யில் மீண்டும் ஞானமுத்து ஸ்ரீநேசன் அதி கூடிய வாக்குகளுடன் பாராளுமன்ற உறுப்பினராவதுடன் உதயகுமார் மற்றும் சாணக்கியன் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது! மூன்றாவது ஆசனம் TNA க்கு முன்னாள் அரச அதிபர் உதயகுமார் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது)

B.சஜித் அணியில் ஓட்டமாவடி - அமீர் அலி வெற்றி பெறும் வாய்ப்பு

C.முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் - ஏறாவூர் நசீர் (முன்னாள் முதல்வர்)வெற்றி பெறும் வாய்ப்பு

ஆனால் அலி சாகிர் மௌலானா வெற்றி பெற வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விரும்புகின்றார்.காரணம் ஏறாவூர் நசீர் வெற்றி பெற்றால் பாதி அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டு ஆளும் தரப்புக்குள் நுழைந்து விடுவார் என்ற அச்சம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு உள்ளது. ஏறாவூர் நசீரின் வெற்றி என்பது ஹக்கீமின் தலைமைக்கு ஆபத்தாகவும் வந்து விடும் என்ற அச்சம் எப்போதும் ஹக்கீமுக்கு உள்ளது.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்த மட்டில் மீண்டும் ஐயா யோகேஸ்வரன் வெற்றி பெறுகின்றார். இரண்டாமிடம் சாணக்கியன் அடைகின்றார். மூன்றாமிடம் உதயகுமார் பெறுகின்றார். ஆனால் பிள்ளையான் அணி 1 ஆசனம் பெறுமானால் உதயகுமார் வெற்றி பெற முடியாது .நான்காம் இடம் சிறிநேசன் அடைகின்றார். சாணக்கியன் தமிழரசுக் கட்சிக்குள் வந்ததே தமிழரசுக் கட்சிக்கு ஒரு வாக்கு வங்கியை கொண்டு வந்துள்ளது.

உதயகுமார் வாக்கு வங்கியல்ல.ஆனால் படித்த மக்கள் மத்தியில் உதயகுமார் செலவாக்கு பெறுகின்றார் .ஆனால் சாணக்கியன் அப்படியல்ல பட்டிருப்பு தொகுதியில் மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டவர் .

இம்முறை வாக்களிப்பு வீதம் குறைவாகவே இருக்கும் .பொதுவாக வடகிழக்கில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் என்பது 50-60 வீதமே.ஆனால் ஓட்டமாவடி,ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய ஊர்களில் முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் என்பது 70-80 வீதமாக இருக்கும் .ஆனாலும் இம்முறை கொரொனோ உள்ளதால், முஸ்லிம் பகுதிகளில் 70 வீதமாக இருக்கும்.அதனால் சராசரியாக 65 வீதமாக நாம் எடுத்துக் கொள்வோம்.

வாக்கு வீதம் அதிகரிக்குமானால் இங்கு நாம் காட்டியுள்ள வாக்குகள் அதிகரிக்கும் .ஆனாலும் நாம் இங்கு தந்துள்ள வெற்றி தோல்வி கணக்கில் மாற்றம் இருக்காது.

பிள்ளையான் கட்சிக்கு நாம் இங்கு நாம் காட்டியுள்ள வாக்குகள் குறையுமானால் பிள்ளையானின் படகு கட்சி வெற்றி பெறமாட்டாது .பிள்ளையான் அணி வெற்றியை எம்மால் ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.அதனால் இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்கள் பெறவே அதிக வாய்ப்புள்ளது .இது மட்டக்களப்பின் இறுதி அறிக்கை!