வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி! தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Murali Murali in தேர்தல்
117Shares

எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் பேனாக்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எந்தவொரு வேட்பாளரையோ அல்லது அரசியல் கட்சியையோ ஊக்குவிக்கும் எந்தவொரு பொருளும் பேனாக்களில் இருக்கக்கூடாது என்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, எந்தவொரு வேட்பாளரையோ அல்லது அரசியல் கட்சியையோ ஊக்குவிப்பதாக கண்டறியப்பட்ட பேனாவும் வாக்குச் சாவடிகளுக்குள் அனுமதிக்கப்படாது.

கிருமி நீக்கம் செய்யப்பட்ட பேனாக்கள் வாக்காளர்கள் பயன்படுத்த வாக்குச் சாவடிகளில் வைக்கப்படும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் சொந்த பேனாக்களைக் கொண்டுவர அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தில் விலகி இருக்கக்கூடாது எனவும் கூறியுள்ளது.