பொதுத் தேர்தலுக்கு சில நாட்கள் உள்ள நிலையில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Vethu Vethu in தேர்தல்
1060Shares

இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிக்க செல்லும் போது காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தையும் அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலில் வாக்களிப்பதற்காக சாரதி அனுமதி பத்திரம் பயன்படுத்த முடியும். எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு மோட்டார் வாகன திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை, காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்திற்கு 6 மாத சலுகைகளும், ஜுன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்திற்கு 3 மாத சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சலுகைக் காலம் நிறைவடையாத சாரதி அனுமதி பத்திரத்தை இம்முறை வாக்களிப்பதற்காக அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.