பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

Report Print Ajith Ajith in தேர்தல்
46Shares

இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் யாவும் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரசாரங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முரண்பாடுகள் தீர்வு பிரிவின் உதவி ஆணையாளர் சுரங்க ரணசிங்கவின் தகவல்படி சமூக ஊடகங்களின் பிரசாரங்கள் ஆணைக்குழுவினால் இன்று நள்ளிரவுக்கு பின்னர் உடனடியாகவே அகற்றப்படும்

இதேவேளை கடந்த ஒரு வாரக்காலப்பகுதிக்குள் சமூக ஊடக பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் 1 லட்சம் 50 ஆயிரம் டொலர்களை செலவிட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை வேட்பாளர்கள் தமது சமூக ஊடக பிரசாரங்களுக்காக 359,795 டொலர்களை செலவிட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.