பொது மக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்

Report Print Sujitha Sri in தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொது தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இந்த நிலையில் பொது மக்கள் இன்றைய தினம் காலை ஏழு மணி முதல் வாக்களிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், மாலை ஐந்து மணிவரையில் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாக்களிக்க செல்லும் மக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகையில்,

இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் வாக்களிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

அதேபோன்று வாக்களித்ததன் பின்னர் மக்கள் ஆங்காங்கே ஒன்று கூடி இருப்பதை தவிர்த்து வீடுகளுக்கு அல்லது வேலைத் தளங்களுக்கு செல்லல் வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.