குடத்தனையில் தனது வாக்குப் பதிவை முடித்த எம் ஏ சுமந்திரன்

Report Print Tamilini in தேர்தல்

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் 9ஆவது நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தனது வாக்குப் பதிவினை பதிவிட்டுள்ளார்.

வடமராட்சிக் கிழக்கு குடத்தனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தனது வாக்கினை அளித்தார்.

பொலிஸ் பாதுகாப்புடன் குடத்தனை அ.த.க வித்தியாலத்தில் இவர் தனது வாக்கை பதிவு செய்ய உள்ளார்.

இன்போது அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சுமந்திரனுடன் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளனர்.

தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 05.00 மணிக்கு நிறைவடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.