யாழில் வாக்குப்பதிவு செய்துள்ள டக்ள்ஸ் தேவானந்தா

Report Print Sumi in தேர்தல்

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைய வாக்களிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதுடன், முன்னாள் அமைச்சர் டக்ள்ஸ் தேவானந்தா யாழ். நாவலர் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை அளித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருவதுடன் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் பேணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.