மாவிட்டபுரத்தில் தனது வாக்குப் பதிவை முடித்த மாவை சேனாதிராஜா

Report Print Gokulan Gokulan in தேர்தல்

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் இன்று நாடளாவிய ரீதியில் சுகாதார விதிமுறைகளுக்கமைய, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்தி வருவதுடன், வாக்களிப்பு நிலையங்களில் சமூக இடைவெளியையும் பேணி வருகின்றனர்.

இதேவேளை தமிழரசு கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது வாக்கினை மாவட்டபுரம் அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் பதிவு செய்துள்ளார்.