தேர்தல் விதிமுறைகளை மீறிய ஏழு வேட்பாளர்கள் கைது

Report Print Banu in தேர்தல்

இலங்கையில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் இதுவரையில் 7 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ஜாலிய சேனரத்ன நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8362 ஆகும். தேசிய தேர்தல் முறைப்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் ஆணைக்குழு மூலமாக, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 337 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றிருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், வியாங்கொட தேசிய கல்வியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கெண்ணும் நிலையத்திற்கு மதுபோதையில் வந்த பொலிஸ் அதிகாரியொருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.