தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறல் தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

Report Print Gokulan Gokulan in தேர்தல்

இலங்கையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், வன்முறைகள் மற்றும் முறைப்பாடுகள் அதிகளவில் பதிவாகியிருந்தன. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவால் ஊடகங்களுக்கு அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலின்படி,

நேற்று இடம்பெற்ற பொது தேர்தலில் சட்ட விதிமீறல் தொடர்பான முறைப்பாடுகளாக 1053 பதிவாகியுள்ளன.

இதில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 288 தேர்தல் சட்ட மீறல்களும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 765 தேர்தல் சட்டமுறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதுவரையில், மொத்தமாக 8657 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது. இதில் 1566 தேர்தல் சட்ட மீறல்கள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு கிடைத்துள்ளதுடன், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 7091 தேர்தல் சட்ட முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், சமூக ஊடகங்கள் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் 5236இல் வர்த்தக விளம்பரங்கள் 100%உம், ஏனைய முறைப்பாடுகள் 78%வீதமும் அகற்றுவதற்கு சமூக வலைத்தள நிறுவனங்கள் மூலம் நடவடிக்கையெடுக்கப்படுள்ளது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.