உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகள் பகிர்வு! இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்தின் கோரிக்கை

Report Print Steephen Steephen in தேர்தல்

பேஸ்புக் மற்றும் வட்ஸ் அப் ஆகிய சமூக ஊடகங்கள் வழியாக உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகள் பகிரப்பட்டு வருவதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஊடாக இந்த உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகள் வெளியில் கசிய விடப்படுவதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு அங்கீகரிக்காத, உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை இலத்திரனியல் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்குமாறும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.