தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 8 ஆயிரத்து 657 முறைப்பாடுகள் பதிவு

Report Print Rakesh in தேர்தல்

தேர்தல் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பில் 8 ஆயிரத்து 657 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைப்பிரிவுக்கு ஆயிரத்து 566 முறைப்பாடுகளும், மாவட்ட தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைப்பிரிவுக்கு 7 ஆயிரத்து 91 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, நேற்று மாத்திரம் தேர்தல் தொடர்பில், பொலிஸ் தலைமையகத்துக்கு 72 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதற்கமைய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.