10 ஆண்டுகளுக்கு பின் நுவரெலியாவைக் கைப்பற்றிய இ.தொ.கா.தலமையிலான அணி - ஜீவன் முதலிடம் – திகாவும் வெற்றி

Report Print Tamilini in தேர்தல்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளில் இரண்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

கொத்மலை, ஹங்குராந்கெத்த ஆகிய தொகுதிகளிலேயே மொட்டு கட்சி முன்னிலை வகிக்கின்றது.

நுவரெலியா மாவட்டம் – கொத்மலை தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 31,822

ஐக்கிய மக்கள் சக்தி – 18,599

ஐக்கிய தேசியக்கட்சி – 18,599

சுயேட்சைக்குழு 01 – 1004

நுவரெலியா மாவட்டம் – ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -29,869

ஐக்கிய மக்கள் சக்தி – 12,949

ஐக்கிய தேசியக்கட்சி – 2394

நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -122,028

ஐக்கிய மக்கள் சக்தி – 78,222

சுயேட்சைக்குழு -01 – 14,787

ஐக்கிய தேசியக்கட்சி –6,356

நுவரெலியா மாவட்டம் – வலப்பனை தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -34,919

ஐக்கிய மக்கள் சக்தி – 18,556

ஐக்கிய தேசியக்கட்சி –1,568

2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் நுவரெலியாவை இ.தொ.கா. அங்கம் வகிக்கும் அணி கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.

2015 பொதுத்தேர்தல், 2019 ஜனாதிபதி தேர்தல்களில் நுவரெலியாவில் இ.தொ.கா. அங்கம் வகிக்கும் அணி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இம்முறை பொதுத்தேர்தலில் ஜீவன் தொண்டமான் தலைமையிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது என தெரியவருகின்றது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை. சுயேட்சையாக போட்டியிட்ட அனுசா சந்திரசேகரனும் தெரிவாவதற்கான வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை.

விருப்பு வாக்குப்பட்டியலில் ஜீவன் தொண்டமான் முன்னிலை வகிக்கின்றார் என மலையகச் செய்திகள் தெரிவிக்கின்றன.