தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை! சஜித் அறிவிப்பு

Report Print Ajith Ajith in தேர்தல்
375Shares

2020 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு தேசியப்பட்டியலில் இடம்தரப்படமாட்டாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது இன்று அவர் இதனைக்குறிப்பிட்டார். பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஐக்கிய மக்கள் சக்தி தமது பயணத்தில் வெற்றிக்கண்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதுவே நாட்டில் யதார்தமான மாற்று அரசியல் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கையின் வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்தியே குறுகிய காலத்தில் அரசியல் சக்தியாக உருவாகியுள்ளதாக சஜித் பிரேமதாச கூறினார்.