பொதுத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ள ஐ.தே.கட்சி

Report Print Ajith Ajith in தேர்தல்

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகியவை பெற்றுக் கொண்ட வாக்குகளை காட்டிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 பொதுத்தேர்தலின் போது 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இவை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 2 லட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகள் மற்றும் தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட 4 லட்சத்து 45 ஆயிரம் வாக்குகள் என்பவற்றின் முழுத்தொகையை விட அதிகமாகும்.

காலி மாவட்டத்தில் 35 ஆயிரத்து 751 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனினும் அங்கு ஐக்கிய தேசியக் கட்சி 18 ஆயிரத்து 968 வாக்குகளையே பெற்றது.

மாத்தறையில் 22 ஆயிரத்து 578 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனினும் அங்கு ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆயிரத்து 651 வாக்குகளையே பெற்றுக் கொண்டது.

பொலன்னறுவையில் ஐக்கிய தேசியக் கட்சி 6 ஆயிரத்து 525 வாக்குகளை பெற்றது. எனினும் அங்கு 16 ஆயிரத்து 20 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

மொனராகலையில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 20ஆயிரத்து 312. எனினும் அங்கு ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆயிரத்து 994 வாக்குகளையே பெற்றுக் கொண்டது.

அநுராதப்புரத்தில் 35 ஆயிரத்து 469 வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டன. எனினும் அங்கு ஐக்கிய தேசியக் கட்சி 8ஆயிரத்து 254 வாக்குகளையே பெற்றுக் கொண்டது.

களுத்துறையில் ஐக்கிய தேசியக் கட்சி 16ஆயிரத்து 485 வாக்குகளை பெற்றது. எனினும் அங்கு 46 ஆயிரத்து 415 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

கொழும்பில் 81 ஆயிரத்து 34 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனினும் அங்கு 30 ஆயிரத்து 875 வாக்குகளையே ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக் கொண்டது.

நுவரெலியாவில் 42ஆயிரத்து 48 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அங்கு ஐக்கிய தேசியக்கட்சி 12 ஆயிரத்து 168 வாக்குகளையே பெற்றுக் கொண்டது.

மாத்தளையில் 24 ஆயிரத்து 503 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனினும் அங்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் 6 ஆயிரத்து 592 வாக்குகளையே பெற முடிந்தது.

கம்பஹாவில் 28 ஆயிரத்து 282 வாக்குகளை மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற முடிந்தது. எனினும் கம்பஹா மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 509 ஆகும்.

கேகாலையில் ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆயிரத்து 168 வாக்குகளை பெற்றது. எனினும் அங்கு 24 ஆயிரத்து 547 வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டன.

ஹம்பாந்தோட்டையில் 18 ஆயிரத்து 971 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட போதும் ஐக்கிய தேசியக் கட்சியினால் 5 ஆயிரத்து 107 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.