தேர்தலில் போட்டியிட்ட 13 கலைத்துறை பிரபலங்கள்

Report Print Steephen Steephen in தேர்தல்

அரசியல் கட்சிகளின் சார்பில் கலைத்துறை சேர்ந்த 13 பேர் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டதுடன் அவர்களில் நான்கு பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட நடிகர் உத்திக பிரேமரத்ன அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றார்.

அவர் அந்த மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்ததாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபல நடிகர் ரஞ்சன் ராமநாயக்க ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 992 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபல திரைப்பட நடிகை கீதா குமாரசிங்க 63 ஆயிரத்து 358 வாக்குகளை பெற்ற வெற்றி பெற்றதுடன், அதே கட்சியில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடட பிரியல் நிஷாந்த டி சில்வா ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 904 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இவர்களை தவிர பொதுஜன பெரமுனவின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட பாடகர் மதுமாதவ அரவிந்த 28 ஆயிரம் வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட நடிகை ஓசாதி ஹேமாமத்தும 10 ஆயிரத்து 957 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பில் போட்டியிட்ட சட்டத்தரணியும் நடிகருமான சுஜீவ சேனசிங்க 30 ஆயிரத்து 572 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான யாளுவோ (நண்பர்கள்) என்ற சிங்கள திரைப்படத்தில் நடித்துள்ளார்.

குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பாடகர் ரூகாந்த குணதிலக்க 26ஆயிரத்து 88 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட நடிகர் ரவிந்திர யசஸ் குமாரநாயக்க 9 ஆயிரத்து 836 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கலைஞர் விமல் கெட்டபே ஆராச்சி 12 ஆயிரத்து 913 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

இதனை தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நடிகர் ஜயந்த கொட்டகொட நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் நடிகை டயனா கமகே, தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இசை கலைஞரான நநீதி குருகே, நடிகை தீபானி சில்வா, நடிகர் ஜகத் மனுவன ஆகியோர் இடம்பெற்றனர்.