தேசிய அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை: சிறிதரன் எம்.பி!

Report Print Samaran Samaran in தேர்தல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் திருமறை கல்விக்கான கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘நாங்கள் தொடர்ச்சியாக தேசிய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து வருகின்றோம். அந்த வகையில் நாம் தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை. இப்போது உள்ள அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும்வரை இந்த அரசாங்கமே தொடர வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

Latest Offers