வேகமாக தயாரிக்கப்பட்ட திரைப்படம்! உலக சாதனை படைத்த இலங்கையர்!!

Report Print Vethu Vethu in பொழுதுபோக்கு

இலங்கையை சேர்ந்த சினிமா கலைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். வேகமாக திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளமையை அடுத்து அவரின் பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குனர் தந்தன ஹேவாபன்ன என்பவர் தயாரித்த “மங்கல கமன“ என்ற திரைப்படத்தின் மூலமே அவர் இந்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஒரு மணித்தியாலமும் 25 நிமிடங்கள் நீளமான இந்த திரைப்படத்தை தயாரிக்க, அவர் 71 மணித்தியாளங்களும் 19 நிமிடங்களையும் செலவிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதியில் இருந்து 25 திகதி வரையிலான காலப்பகுதியினுள் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளமை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல் கின்னஸ் குழுவினால் www.guinnessworldrecords.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணமான ஜோடிகள் தமது முதலிரவில் முகங்கொடுக்கும் மன ரீதியான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக, படத்தின் இயக்குநரான நந்தன ஹேவாபன்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்த திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் உலகின் வேகமான திரைப்பட தயாரிப்புக்கான கின்னஸ் சாதனையை நமீபியா திரைப்பட இயக்குனர் படைத்துள்ளார்.

அந்த நமீபியா திரைப்பட இயக்குனர் தனது திரைப்படத்தை 10 நாட்கள் மற்றும் சில மணித்தியாளங்களில் நிறைவு செய்திருந்தார்.

Comments