உலகளாவிய ரீதியில் இலங்கையின் நிலை என்ன? அமெரிக்க இணையத்தளத்தின் கண்டுபிடிப்பு

Report Print Vethu Vethu in பொழுதுபோக்கு
984Shares

சுற்றுலா பயணத்தில் ஈடுபடும் நபர்களுக்கு இடையில் விசேட அவதானத்திற்கு உட்படுத்தபடும் வகையில் பல நாடுகள் உள்ளன. அந்த நாடுகள் அவதானத்திற்குட்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

சுற்றுச்சூழல் அழகு, உயிரியல் பல்வகைத்தன்மை, கலாச்சார பன்முகத்தன்மை, கலை மற்றும் வரலாறு ஆகிய பல விடயங்கள் முக்கிய காரணமாக உள்ளன. அத்துடன் காலநிலை இவை அனைத்திலும் முக்கிய இடத்தை பிடிக்கின்றது.

அந்த வகையில் இலங்கையும் சர்வதேச சுற்றுலா பயணிகளின் அவதான மற்றும் ஈர்ப்புக்குள்ளான நாடுகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்த சூழல் நிறைவுக்கு வந்ததனை தொடர்ந்து உலகின் முன்னணி சுற்றுலா மையமாக இலங்கையின் மீது சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளது.

அதற்கமைய நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு மற்றும் ஓய்வு பெறுவதற்கு எவ்வாறான இடம், அந்த இடங்களில் எவ்வகையான சூழல் கிடைக்கும் என்பது தொடர்பில் சுற்றுலா துறையில் அவதானம் செலுத்தப்படுவதோடு நாட்டின் அணுகுமுறை ஒரு முக்கியமான காரணியாகும்.

இவை அடங்கிய இடங்களில் உணவு மற்றும் நீர் ஆகிய விடயங்கள் முக்கியமாக கருதப்படுகின்றன. இலங்கையில் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு குறிப்பிட்ட விடயங்கள் உள்ளடங்கப்படுகின்றமையினால் உயர் விருந்தோம்பும் ஹோட்டல்களின் நன்கு தகுதியான சேவை அவசியமாகும்.

இந்த நாடு முழுவதும் உள்ள சுற்றுலா ஹோட்டல்களுக்கு சிறந்த 25 ஹோட்டல்களை பட்டியலிடுவதற்கு TripAdvisor செயற்பட்டுள்ளது.

சுற்றுலா துறையில் உலக பிரபல இணையத்தளமாக கருதப்படுகின்ற TripAdvisor இணையத்தளம், அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான தென்ற போதிலும் மிகப் பரந்த அளவில் சுற்றுலா பயணிகள் தங்கள் சுற்றுலா பயணங்களுக்கு முன்னர் தகவல் பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தும் பிரதான ஒரு ஆதாரமாக இந்த இணையத்தளம் கருதப்படுகின்றது.

அத்துடன் அந்த இணையத்தளம் 2016ஆம் ஆண்டில் அதிக சுற்றுலா பயணிகளின் அவதானத்தை பெற்றுக் கொண்ட இணையத்தளமாகும்.

TripAdvisor இணையத்தளத்திற்கமைய இலங்கையின் சுற்றுலா ஹோட்டல்கள் 25 பட்டியலிடப்பட்டுள்ளது பின்வருமாறு,

1. Uga Bay Hotel - இலங்கையில் சிறந்த கடற்கரைகளுள் ஒன்றாக கருதப்படும் பாசிக்குடா கடற்கரைக்கு அருகில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

2. Jetwing Vil Uyana - சீகிரிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஹோட்டலாகும். அற்புதமான நெல் வயல் மத்தியில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேடமாகும்.

3. Cape Weligama - பெருங்கடல் எதிர்கொண்ட நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் வெலிகம முனையில் அமைந்துள்ளது.

4. Amanwella - இது தங்கல்லை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டலாகும்..

5. The Fortress - இந்த ஹோட்டல் கேகாலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

6. Jungle Beach - இந்த ஹோட்டல் இலங்கையின் கிழக்கு குச்சிவெலி பிரதேசத்தில் அமைந்துள்ளது.

7. Jetwing Yala - யால தேசிய பூங்கா எல்லைகளில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

8. Aliya Resort and Spa - இது சீகிரியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு சிறந்த ஹோட்டலாகும்.

9. Anilana Nilaveli - நிலாவெளி கடலோர பகுதியில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

10. Anilana Pasikuda - மன்னார் பாசிக்குடா கடற்கரை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மற்றுமொரு ஹோட்டல் இதுவாகும்.

11. Amangalla - இது காலி நகரத்தில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலாகும்.

12. Barberyn Beach Ayurveda Resort - வெலிகம பிரதேசத்தில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

13. Jetwing Lagoon - நீர்கொழும்பு பிரதேசத்தில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

14. Hotel Mermaid & Club - களுத்துறையில் அமைந்துள்ள மற்றுமொரு சிறந்த ஹோட்டலாகும்.

15. Vivanta by Taj - Bentota - இது பெந்தோட்ட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 5 நட்சத்திர ஹோட்டலாகும்.

16. Eden Resort & Spa - இது பெருவல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விடுதியாகும்.

17. Heritance Ahungalla - இது அஹுன்கல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அழகான ஹோட்டல் ஒன்றாகும்.

18. Lanka Princess - இந்த ஹோட்டல் அலுத்கம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

19. Suriya Resort - வைக்கல் பிரதேசத்தில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

20. Cinnamon Wild Yala - கிரிந்த பிரதேசத்தில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

21. Heritance Tea Factory - இது நுவரெலியாவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலாகும்.

22. Club Hotel Dolphin - இது வைக்கல் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மற்றுமொரு ஹோட்டலாகும்.

23. Heritance Kandalama - காண்டலம் ஏரிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு சிறந்த ஹோட்டலாகும்.

24. Cinnamon Lodge Habarana - இது ஹபரன பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு ஹோட்டலாகும்.

25. Colombo Courtyard - இது தலைநகர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு ஹோட்டலாகும்.

Comments