தந்தையை மிஞ்சிய தனயன்! மைத்திரியின் புதல்வரின் செயற்பாடு!

Report Print Vethu Vethu in பொழுதுபோக்கு
2323Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன நேற்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு வெலிவேரிய நாரங்கல ஸ்ரீ சுமனகீர்தி விகாரையில் 100 பிக்குகளுக்கு தஹாம் சிறிசேன தானம் வழங்கியுள்ளார்.

அத்துடன் உலர் உணவு பொருட்கள் மற்றும் பொருட்களை வழங்கி வைத்து தஹாம் சிறிசேன தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

மிகவும் எளிமையான முறையில் பிறந்த நாளை கொண்டாடிய தஹாம் சிறிசேனவுக்கு சமூக வலைத்தளங்கள் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் மகனின் எளிமையான கொண்டாட்டம், பலருக்கு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையான மனிதர் என சர்வதேச ரீதியாக புகழ் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரின் புதல்வரின் எளிமை குறித்து சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Comments