மத்திய மலைநாடான நுவரெலியா பகுதியில் இன்று காலை முதல் தற்போது வரை அதிக பனிமூட்டம் நிறைந்த காலநிலை காணப்படுகின்றது.
இதனால், நுவரெலியா - கண்டி, நுவரெலியா - பதுளை மற்றும் நுவரெலியா - ஹற்றன் பிரதான பாதைகளில் வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், வாகனத்தின் மின் விளக்குகளை ஒளிரவிட்டு செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்