மரம் முறிந்து மின்கம்பத்தின் மேல் விழுந்து பாரிய சேதம்

Report Print Thirumal Thirumal in சூழல்
101Shares

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் ஹற்றன் - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ நீர்தேக்க பகுதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததன் காரணமாக போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று மதியம் 1.45 மணியளவில் நடந்துள்ளதாக அறியமுடிகின்றது.

மரம் சரிந்து விழுந்ததால் மின் கம்பியும் அறுந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த பிரதேசத்திற்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

எனினும் மரத்தை வெட்டி அகற்றுவதற்கு தற்பொழுது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

போக்குவரத்து தடைப்பட்டுள்ளதன் காரணமாக லக்ஷபான மற்றும் நோட்டன் பிரிட்ஜ் செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments