வரட்சி காலநிலையால் பல மாவட்டங்கள் பாதிப்பு

Report Print Ajith Ajith in சூழல்
53Shares

வரட்சியான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு அனுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

பொலன்னறுவை மாவட்டமே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலுள்ள 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 6 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்கள் வரட்சி காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

14 ஆயிரத்து 348 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை இந்த மாத இறுதி பகுதி வரை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதியின் பின்னர் ஓரளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Comments