நதிகளில் கடல்நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை

Report Print Ajith Ajith in சூழல்

பிரதான நதிகளில் கடல் நீர் கலக்காமலிருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கர் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான தற்காலிக நடவடிக்கையாக மணல் மூட்டைகளை இட்டு தடைகளை ஏற்படுத்தி பிரதான நதிகளில் கடல் நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நதிகளில் நீர்மட்டம் குறைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை பகுதியில் பாரிய நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நீர்த்தட்டுப்பாட்டை நிர்வர்த்தி செய்ய பௌசர்கள் ஊடாக நீர்வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த தற்காலிக நடவடிக்கை சரியான தீர்வாக அமையாது. தமக்கு நிரந்த தீர்வொன்று வேண்டும் என குறித்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Comments