தலவாக்கலை காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு

Report Print Thirumal Thirumal in சூழல்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா தோட்டத்துக்கு அண்மித்த பாதுகாப்பு வனப்பகுதியில் இன்று மாலை 5.00 மணியளவில் ஏற்பட்ட தீயினால் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட காட்டுப்பகுதியில் 15 ஏக்கர் அளவு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.

இத்தீ காரணமாக இப்பிரதேசத்தில் உள்ள அரிய வகை மரங்கள், உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இக்காட்டுப்பகுதியில் இருந்தே நானுஓயா தோட்ட மக்களுக்கு குடிநீரினையும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

தொடர்ச்சியாக மலையகத்தில் உள்ள காட்டுப்பகுதிகளுக்கு தீ வைப்பதனால் எதிர்காலத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சூழல் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Comments