வைத்தியப்பணி என்பது மகத்தான பணி: யாழ். மறைமாவட்ட ஆயர்

Report Print Arivakam in சூழல்

வைத்தியப்பணி என்பது இந்த உலகில் ஓர் மகத்தான பணி என யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஜானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பரந்தன் பகுதியில் திருச்சிலுவை கன்னியர் மடத்தின் வைத்தியசாலையை திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த உலகினை காக்கின்ற தொழிலாக இருக்கின்ற வைத்தியம் இருக்கின்றது. அந்த வைத்தியத்துறைக்காக திருச்சிலுவை குடும்பத்தினரால் திறக்கப்படும் இவ் வைத்தியசாலையை திறந்து வைப்பதில் நான் பெருமையடைகின்றேன்.

யுத்தம் நடந்த பூமியில் மிகவும் தேவையான ஒரு இடத்தில் இவ் வைத்தியசாலை அமைவதென்பது மிகவும் சிறப்பானது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த மண்ணில் யுத்தம் நிலவுகின்ற போதும் நாம் சந்தித்த நெருக்கடியான சூழ்நிலைகளின் போதும் அருட்சகோதரிகள் ஆற்றிய பங்கு மகத்தானது.

வைத்தியத்துறையிலும் கல்வித்துறையிலும் அருட்சகோதரிகளும் அருட்தந்தையர்களும் ஆற்றிய பணியினை எவரும் மறக்க முடியாது. எமது இனத்தின் விடுதலைக்காகவும் அருட்தந்தையர்களும் அருட்சகோதரிகளும் முக்கிய பங்கினை வகித்திருக்கிறார்கள், வகித்து கொண்டிருக்கிறார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பின் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் வடமாகாண திருச்சிலுவை கன்னியாஸ்திரிகளின் ஒன்றியத்தலைவி கிளிநொச்சி மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் வைத்தியர்கள் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.