இத்தாலியில் ஏற்பட்ட விபத்தில் இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனரா?

Report Print Vethu Vethu in ஐரோப்பா

இத்தாலியில் ஏற்பட்ட படகு விபத்தில் இலங்கையர்கள் உயிரிழந்தமைக்கான உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் விபத்துக்குள்ளான படகில் இலங்கையர்கள் இருப்பதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகில் இலங்கையர்கள் பயணித்தமைக்கான உரிய தகவல்களை ஆராய்ந்து பார்க்கவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தாலிய கடற்பரப்பில் பயணித்த படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 700 பேரை காப்பாற்ற முடிந்துள்ளதுடன், 23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 64 பேர் காணாமல் போயுள்ளதாக இத்தாலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

காப்பாற்றப்பட்டவர்களில் இலங்கையர்கள் இருப்பதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் உயிரிழந்தவர்களில் இலங்கையர்கள் இருப்பதாக இத்தாலி இதுவரை உறுதி செய்யவில்லை.

காப்பாற்றப்பட்டவர்களில் இலங்கை, பாகிஸ்தான், லிபியா, பங்களாதேஷ், எல்ஜிரியா, எகிப்து, மொரோக்கோ, ஜோர்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளதாக இத்தாலி கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.