25 வருடங்களாக ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்! நடுவீதியில் அடித்துக் கொல்லப்பட்ட மர்மம்

Report Print Vethu Vethu in ஐரோப்பா

இத்தாலியில் தொழிலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வென்னப்புவ பகுதியை சேர்ந்த 52 வயதான மெரில் சாந்தி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி இரத்த காயத்துடன் நாபொலி நகர வீதியில் விழுந்த கிடந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 25 வருடங்களாக இத்தாலியில் தொழில் செய்து வந்துள்ளார். இத்தாலியில் அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.

விபத்து காரணமாக அவர் உயிரிழந்தாரா அல்லது யாரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் இத்தாலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாபொலி நகரத்தில் பல்வேறு நாசகார கும்பல்கள் இயங்குவதாகவும், இத்தாலியில் வாழும் வெளிநாட்டவர்கள் இந்த கும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன்.

குறித்த இலங்கையரும் அந்தக் குடும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


You may like this video