ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்து - 6 பேர் பலி

Report Print Vethu Vethu in ஐரோப்பா

டென்மார்க்கில் உள்ள Great Belt பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்து பலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் வடக்கு ஐரோப்பாவைக் கடக்கும் கடுமையான காற்றினால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காற்று காரணமாக பயணிகள் ரயில் ஒன்று, குப்பைகள் கொண்டு செல்லும் ரயிலில் மோதுண்டுள்ளமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.