ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர்! இதுவரை 21 பேர் பலி - சுவிட்சர்லாந்தில் 4 பேர் மரணம்

Report Print Vethu Vethu in ஐரோப்பா

ஐரோப்பாவின் பல நாடுகளில் நிலவும் கடும் குளிர் காரணமாக 21 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரித்தானியா, ஒஸ்ரியா உள்ளிட்ட பல நாடுகளில் கடுமையான பனிப்பொழி பெய்து வருகிறது.

இதன்காரணமாக அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. வீதியோரங்களில் குவிந்து கிடக்கும் பனிக்கட்டிகளால் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் பெய்த கடுமையான பனியால் ஐந்து மாவட்டங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. கட்டடங்களின் கூரைகளிலிருந்து பனியை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஒஸ்ரியாவில் பனிச்சரிவு அபாயம் குறித்த எச்சரிக்கை உயரிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு, கடந்த சில நாட்களிலேயே, ஒரு மாதத்திற்கான சராசரிப் பனிப்பொழிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் இன்றும் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் அதிக பனிபொழிவு காரணமாக ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த ஹோட்டல் அமைந்துள்ள பகுதியில் திடீரென 300 மீற்றர் உயரத்தில் பனி மூடியமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

ஜேர்மனியில் பனி பொழிவு காரணமாக மின்சார தூண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல பிரதேசங்களுக்கு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சார பாதிப்புகளை சீர் செய்து கொண்டிருந்த நபர் திடீர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஒஸ்ரியா நாட்டில் பனிபொழிவில் சிக்கியிருந்த 66 ஜேர்மன் இளைஞர்களை காப்பாற்றுவதற்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Albania என்ற பகுதியில் பனி பொழிகளை அப்புறப்படுத்தும் பணிக்காக குறைந்தப்பட்சம் 2000 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடும் பனி பொழிவு காரணமாக Frankfurt விமான நிலையத்தில் 120 விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Latest Offers