ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்ட பெருமளவு இலங்கையர்கள் கைது

Report Print Vethu Vethu in ஐரோப்பா

சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்ட 558 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையர்கள் உட்பட 558 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கி பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி ஊடாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் செல்ல முயற்சித்தவர்களே அந்நாட்டின் மேற்கு Edirne மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மொரோக்கோ, துனிசியா, ஈரான், ஈராக், பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவுக்கு நுழைவதற்கு துருக்கியே பிரதான பாதையாக உள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்தாண்டில் மாத்திரம் 268,000 சட்டவிரோத குடியேறிகள் துருக்கி ஊடாக புலம்பெயர்ந்துள்ளதுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers