ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர் - மனைவிக்கும் தொடர்பா?

Report Print Vethu Vethu in ஐரோப்பா

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இத்தாலியின் லுக்கா நகரில் தொழிலில் ஈடுபட்டுள்ள இலங்கையரே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் கிழக்கு நைனமடம் பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான கே.ரொஷான் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் மனைவி பொலிஸாரிடம் வழங்கிய தகவலுக்கமைய இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் தங்கியிருந்த சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக லூக்கா நகரத்தில் சேவை செய்யும் இந்த நபர் முதலாவது மனைவியை பிரிந்து வேறு பெண்ணுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers