ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்கள்!

Report Print Dias Dias in ஐரோப்பா

தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழர் சார்ந்த பிரச்சினைகளை விளக்கும் நோக்குடன் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் Bruxelles நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் “ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்கள்” எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கலந்துரையாடலானது பின்வரும் தலைப்புக்களை உள்ளடக்கி இடம்பெற்றுள்ளது. அவை பின்வருமாறு,

ஐரோப்பாவில் வாழும் ஈழத்தமிழர்களின் நிலைமை,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை மற்றும் அதன் விளைவுகள், தமிழர் உரிமைச் செயற்பாட்டாளரின் சாட்சியம், ஐரோப்பாவில் வாழும் ஈழத் தமிழர்களின் கோரிக்கை என்பனவாகும்.

குறித்த கலந்துரையாடலின் பேச்சாளர்களாக : Ms. Julie wards - சோசலிச சனனாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Thillaiambalam Paramsothy - யேர்மன் மொழி பெயர்ப்பாளர் மற்றும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர் Ms.Shivani Jegarajah - சட்டத்தரணி, பிரித்தானியா Princess Dora Gorim - செயற்பாட்டாளர் மற்றும் சட்டத்தரணி, தெற்கு கமரூன் Dr A. Bernadette - செயற்பாட்டாளர் மற்றும் முனைவர், தெற்கு கமரூன் Nishanthi Piris - பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் மற்றும் மக்கள் தொடர்பாளர், தமிழர் இயக்கம் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.