இத்தாலியில் வாழும் 60 ஆயிரம் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

Report Print Vethu Vethu in ஐரோப்பா

இத்தாலியில் 11 மில்லியன் மக்கள் வாழும் Lombardy மாகாணம் முடக்கப்பட்டுள்ளமையினால் அங்கு வாழும் இலங்கையர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஏப்ரல் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அங்குள்ள ஜிம்கள், குளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

இத்தாலியில் சுமார் 104000 இலங்கையர்கள் வாழும் நிலையில், 60 ஆயிரம் இலங்கையர்கள் Lombardy மாத்திரம் வாழ்வதாக கூறப்படுகின்றது.

குறித்த மாகாணங்கள் முடக்கப்பட்டமையினால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் 230 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

5883 பேர் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.