கொரோனா தொற்று! ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை

Report Print Ajith Ajith in ஐரோப்பா
99Shares

ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் புதிதாக தொற்றுக்கு இலக்காவோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வரும் நாட்களில் மிகவும் கடுமையான நிலைமைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 30 மில்லியனை எட்டியுள்ளன.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 942,000 இற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

நேற்று டென்மார்க் கோபன்ஹேகனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் க்ளூக், கடந்த வாரம் மட்டும் ஐரோப்பா முழுவதும் 300,000 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த எண்கள் இன்னும் விரிவான சோதனைகளின் தேவைப்பாட்டை உணர்த்துக்கின்றன. அத்துடன் இது பிராந்தியத்தில் பரவும் ஆபத்தான நிலைமையைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.