இத்தாலியில் ஒருவரை துணிச்சலாக போராடி காப்பாற்றிய இலங்கையர்

Report Print Vethu Vethu in ஐரோப்பா

இத்தாலியில் தன் உயிரை பணயம் வைத்து சாரதி ஒருவரை காப்பாற்றிய இலங்கையர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இத்தாலி மிலான் நகரத்திற்கு அருகில் மொன்சோ பிரதேச வீதியில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றியுள்ளது. இதன் போது தனது உயிரை துச்சமென நினைத்து, சாரதியின் உயிரை குறித்த இலங்கையர் காப்பாற்றியுள்ளார் என அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 22ஆம் திகதி மொன்ஸோ, லின்ஸோ பிரதேச வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்ற போது, அருகில் ஒருவரும் செல்லாமல் இருந்துள்ளனர்.

இதன்போது வீடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த இலங்கையர் தீப்பற்றிய வாகனத்தின் கண்ணாடியை உடைத்து 34 வயதுடைய இத்தாலி நாட்டவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்னரே அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் என குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அசங்க என்ற 36 வயதுடைய இலங்கையரே போராடிய இத்தாலிய சாரதிய காப்பாற்றியுள்ளார் என பாராட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.