ஐரோப்பிய நாடொன்றில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 6 இலங்கையர்கள்

Report Print Vethu Vethu in ஐரோப்பா
1601Shares

இத்தாலி மிலான் நகரத்தில் வாழும் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

மிலான் நகரத்தில் சென் கார்லோ வைத்தியசாலையில் நேற்று முன்தினம் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மிலான் பரன்சாதே பிரதேசத்தில் தொழில் செய்யும் தெவிந்த பெர்ணான்டோ என்ற 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டமையினால் ஒரு வாரத்திற்கு முன்னர் சென் கார்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிந்துள்ளார். அவர் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவராகும்.

இதேவேளை இத்தாலியில் இதுவரையில் 6 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.