மனமாற்றத்தை உருவாக்குவதற்கு ஆன்மீகம் தேவை: நீதிபதி கணேசராஜா

Report Print Reeron Reeron in நிகழ்வுகள்

சமூதாயத்தில் சட்டத்தினால் உயர்தண்டனைகளை வழங்குவதன் மூலம் மட்டும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாது.

மனமாற்றத்தை உருவாக்குவதற்கு ஆன்மீகம் தேவையானது என நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தெரிவித்தார்.

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் பிள்ளையார் கோவில் திருப்பணிச்சபை ஏற்பாட்டு குழுவினரினால் ஒழுங்கு செய்த கலைவிழாவில் இன்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்;

தானங்களில் சிறந்தது அன்னதானம். அத்துடன் ஞானதானத்தையும் இத்திருப்பணிச்சபை சிறப்பாக செய்து வருவது வரவேற்கத்தக்கது. இத்தொண்டு மகத்தான தொண்டு.

சமுதாயத்தில் சட்டத்தினால் உயர்தண்டனைகளை வழங்குவதன் மூலம் மட்டும் குற்றச்செயல்களை கட்டுபடுத்த முடியாது. மனமாற்றத்தை உருவாக்குவதற்கு ஆன்மீகம் தேவையானது.

அமெரிக்காவில் புகழ் பெற்ற நீதிபதிகளினால் வழங்கப்பட்ட கொலைக்குற்றசாட்டிற்கான ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனைகள் தவறு என பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது.

மனிதர்களின் தீர்ப்புக்களை விட இறைவனின் தீர்ப்பில் நம்பிக்கை வையுங்கள். இறைவனின் தீர்ப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிழைத்ததில்லை.

இன்றைய கால கட்டத்தில் குற்றங்களின் பின்னணியை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் தண்டனைகளை வழங்குவதும், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதும் நவீன நீதிப் பொறி முறையாக உருவாகி வருகிறது.

இன்றைய கால கட்டத்தில் திருவிழாக் கலைஞர்களின் ஆன்மீக சொற் பொழிவுகள் நடாத்தப்படல் வேண்டும். அதன் மூலம் ஏற்படுகின்ற மனமாற்றமே சிறந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.

Comments