சித்தாண்டியில் பண்ணிசைப் பாடசாலை உதயம்

Report Print Reeron Reeron in நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பலம்பெரும் கிராமங்களில் ஒன்றாக பலவித வரலாறு பாரம்பரியங்களை அன்றிலிருந்து இன்றுவரை கட்டிக்காத்து வருகின்ற சித்தாண்டி பெருங்குடிக் கிராமத்தில் பண்ணிசைப் பாடசாலையொன்று உதயமாகியுள்ளது.

குறித்த சித்தாண்டி கிராமமானது பழம்பெரும் பாரம்பரியங்களையும் பெரு நிலப்பரப்பும் அதிகளவான இந்து ஆலயங்களைக் கொண்டு அமைந்துள்ள பல வளங்களைக் கொண்டதோர் அழகிய கிராமமாக அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

அந்தவகையில் குறித்த கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர்களைக் எதிர்கால சந்ததிக்கு சைவம் மற்றும் கலைகளின் பாரம்பாரியங்களை எடுத்துச்செல்லும் முகமாக சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் ஒத்துழைப்புடன் இந்த பண்ணிசைப் பாடசாலை இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நடனம், சங்கீதம், கூத்து, கிராமிய பாரம்பரிய கலைப்படைப்புக்கள், பன்னிசை, சைவ ஒழுக்கநெறி கற்கை போன்ற பல துறைகளை விரும்பி கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் ஏனைய ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இலவசமான முறையில் அனைத்து கற்கை மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

பண்ணிசைப் பாடசாலையின் பிரதான நோக்கமாக, சித்தாண்டி மற்றும் அண்டிய கிராமங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஆர்வம் காட்டி ஒழுக்க சீலர்களாக வாழ்வது மட்டுமின்றி,

ஆலயங்களில் நடைபெறும் சைவ நிகழ்வுகளிலும் தங்களின் திறமைகளை ஒப்பிக்கவைப்பதுடன், மறைந்துபோகும் இந்து கலாசாரத்துக்கு புத்துயர்கொடுத்து இவ்வாறான மாணவ சமூதாயத்தை எதிர்காலத்தை நோக்கிய ஒழுக்கமுடையவர்களாக கொண்டுசெல்வதாகுமென நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

குறித்த சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை அமைப்பானது குறுகிய காலத்துக்குள் சித்தாண்டி மற்றும் அண்டிய பிரதேசங்களில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவுதல், பாடசாலை மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார்படுத்திக்கொடுத்தல், கலாசார நிகழ்வுகள், விளையாட்டுக்கள், கிராம மட்டத்தில் வருடாந்தம் விருதுகள் வழங்கி கௌரவிக்கின்றமை போன்ற பலவித சேவைகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments