பொலிஸ் மோப்ப நாய்களின் பராமரிப்பு பிரிவு நிலைய திறப்பு விழா

Report Print Thirumal Thirumal in நிகழ்வுகள்

ஹற்றன் பிரதேசத்தில் போதைப் பொருட்கள் மற்றும் சமூக குற்றச்செயல்களை கண்டுபிடிக்க பயிற்சி பெற்ற பொலிஸ் மோப்ப நாய்களின் பராமரிப்பு பிரிவு நிலைய திறப்பு விழா இன்று மாலை ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

ஹற்றன் பொலிஸ் வலய உதவி பொலிஸ் அதிகாரி உடுகம சூரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாண பிரதி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கலந்து கொண்டு மேற்படி நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மோப்ப நாய் பிரிவு பணிப்பாளர் சிசிர வீரகோன், நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பத்மஸ்ரீ முணுசிங்க மற்றும் ஹற்றன் பொலிஸ் தலைமையக அத்தியட்சகர்கள், ஹற்றன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, கினிகத்தேனை, நோட்டன்பிரிட்ஜ், வட்டவளை, நோர்வூட், நல்லதண்ணி ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், அம்பகமுவ பிரதேச செயலாளர் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Latest Offers

loading...

Comments