தமிழ் மாணவர்களுக்கு ஆளுநரின் சிங்கள மொழிக் கடிதம் - மனோ கண்டனம்

Report Print V.T.Sahadevarajah in நிகழ்வுகள்
175Shares

காரைதீவு விபுலானந்தா சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைத் திருவிழாவை இன்று(27) தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது அவர் உரையாற்றுகையில்,

“நாட்டில் இனவாதம், மதவாதம், மொழிவாதம், அடிப்படைவாதம், அரச பயங்கரவாதம், பிரிவினைவாதம் என்பனவற்றை அழிக்க நான் அயராது பாடுபடுவேன். ஆட்சி மொழியாக சிங்களம் மற்றும் தமிழ் மொழி என்பன இருக்க மதங்களாக பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் என்பன அங்கீகாரம் பெற்றுள்ளன.

இனங்களாக சிங்களம், தமிழ், முஸ்லிம் என்பன பிரதானமாக இருக்க தமிழ் இனம் ஈழத் தமிழ், இலங்கைத் தமிழ், மலையகத் தமிழ் என பிரிவுபட்டு இருக்கின்றது. எனினும் இவற்றை பேதங்களாகப் பார்ப்பவன் மன நோயாளியே ஆகும்.

எமது அமைச்சில் 19 இனங்கள் இலங்கையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஒரே இனம் அல்லது மொழி என வாதிப்பவன்தான் இனவாதியாவான். இவற்றை நீக்குவதற்காகத்தான் இது போன்ற கலை நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன.

முற்போக்கு சிந்தனையாளன் எப்போதுமே இன, மத, மொழி என்பவற்றை புரிந்து கொண்டு வாழப் பழகுவான். நானும் அவ்வாறானதொரு முற்போக்கு வாதியே.

சமீபத்தில் யாழில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ் மாவட்ட ஆளுநருக்கு விடுத்துள்ள மனுவிற்குப் பதில் அளிக்கும் வகையில் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் சிங்கள மொழியில் அமைந்திருந்தமையை நான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஜெயசிங்கம், விபுலானந்தா அழகியற் கற்கை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜெய்சங்கர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்கரன், காரைதீவு பிரதேச செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments